Wednesday 11 January 2012

பரிசல் டிக்‌ஷ்னரி


இணையம் – மனைவியிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள கணவர்கள் தஞ்சமடையும் இடம்

ஃபேஸ்புக்:பெண்கள் அக்கவுண்டில் ‘ஃபோட்டோஸ்’ பகுதியை ஆண்கள்
ஆர்வமாகப் பார்க்கும் இடம்

ட்விட்டர் – பஸ் மூடியதால் பலர் தஞ்சமடையும் இடம்

கூகுள் ப்ளஸ் – இன்னமும் இன்னதென்று தெரியாத ஒரு வஸ்து

பதிவர் – தனது அனுபவங்களை இணையத்தில் கன்னா பின்னாவென எழுதுபவர்

எழுத்தாளர் – அதையே அச்சில் புத்தகமாகப் போடுபவர்

ச்சாட் – ஆஃப் த ரெகார்ட் போட்டு ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளும் இடம்

மெய்ல்: பெர்சனல் அக்கவுண்டிலேயே அஃபீஷியலாக ஒன்றும் ரொம்பவே பெர்சனலாக ஒன்றும் வைத்துக் கொள்வது

காலை வணக்கம்: அருகிலிருப்பவருக்கு சொல்லாமல் அண்டார்டிக்காவில் இருப்பவர்களுக்கு சொல்வது

குட் நைட்: அதிகாலை 3 மணிக்கு சொல்லிக் கொள்வது.

சினிமா விமர்சனம்: ஏதாவது பஞ்ச் லைனில் முடிவது

பின்னூட்டப் பெட்டி: அருமை , அட்டகாசம், ---------- டச் என்றுநண்பர்கள் எழுதும் இடம்

எதிரிகள்: மேற்கண்டவாறு எழுதாதவர்கள்

பொறாமை: அடுத்தவர் நம்மீது நல்ல விமர்சனம் வைக்கும்போது,
அவர்களைப் பற்றி நாம் சொல்ல பயன்படுத்துவது

காலை 9 மணி: அலுவலர்கள் வருவார்கள் என்று முதலாளிகள் எதிர்பார்க்கும் நேரம்

10 மணி: முதலாளி வந்துவிடுவாரோ என்று அலுவலர்கள் வேலை செய்வதாய் பாவ்லா காட்ட ஆரம்பிக்கும் நேரம்

11 மணி: கேண்டீன் டைம்.

கேண்டீன் - ஸ்டாஃப்ஸ் மீட்டிங் நடக்குமிடம்

கான்ப்ரன்ஸ் ஹால் - ஸ்டாஃப்ஸ் டீ/காஃபி சாப்பிடுமிடம்

பொங்கல்: கணவர்களுக்கு தினமும் கிடைப்பது

பூரிக்கட்டை: பூரி செய்யவும் இதை உபயோகப்படுத்தலாம் என்று மனைவியர் அறிந்து கொண்ட வஸ்து

ஜனாதிபதி - இந்தியாவின் முதல் குடிமகன்

கேப்டன் - தமிழகத்தின் முதல் குடிமகன்

வெற்றிகரம் - ஒரு படம் இரண்டாவது நாள் ஓடினால் தயாரிப்பாளர்கள் சொல்வது

சூப்பர் ஹிட் - வெளியான இரண்டாம் மாதம் டிவியில் வரும் படம்

சீரியல் - பெண்களைத் திட்டிக் கொண்டே ஆண்கள் பார்ப்பது

க்ரிக்கெட் - ஆண்கள் பார்ப்பதாலேயே பெண்கள் வெறுப்பது

வேஷ்டி - சத்தியமூர்த்தி பவனைச் சுற்றியுள்ள கடைகளில் அதிகம் விற்பனையாவது

பஞ்சாயத்து – தவறு செய்தவன் பணம் கொடுக்கும் இடம்

போலிஸ் ஸ்டேஷன்: புகார் கொடுத்தவன் / தவறு செய்தவன் இருவரும்
பணம் கொடுக்கும் இடம்

ஹார்ன்: வாகன ஓட்டிகள் தேவையில்லாத போதெல்லாம் உபயோகிப்பது

ப்ரேக்: வாகன ஓட்டிகள் தேவையான போதெல்லாம் உபயோகிக்க மறப்பது.


-இப்போதைக்கு இவ்வளவுதான். தொடரலாம். சான்ஸ் இருக்கிறது..


.


29 அலசல்கள்...:

ILA(@)இளா said...

அருமை , அட்டகாசம், பரிசல் டச்

SenthilMohan said...

பின்னூட்டப்பெட்டி -
வட, மொத வட, வட போச்சே.

NAAI-NAKKS said...

Pakirvukku
nanri....super....sema...
:)
:)
:)

shabi said...

வெற்றிகரம் - ஒரு படம் இரண்டாவது நாள் ஓடினால் தயாரிப்பாளர்கள் சொல்வ//// இரண்டாவது ஷோவே போடுவது .....வெற்றி நடைபோடுகிறது...

விக்னேஷ்வரி said...

Super dictionary!

காட்டான் said...

;-)

முகமூடி said...
This comment has been removed by the author.
KSGOA said...

ரொம்ப யோசிக்கிறீங்க!!! நல்லா இருக்கு.

சேலம் தேவா said...

//காலை வணக்கம்: அருகிலிருப்பவருக்கு சொல்லாமல் அண்டார்டிக்காவில் இருப்பவர்களுக்கு சொல்வது

குட் நைட்: அதிகாலை 3 மணிக்கு சொல்லிக் கொள்வது.//

கலக்கல் பாஸ்... :)

சுரேஷ் கண்ணன் said...

good. continue. :)

Lakshmi said...

எல்லாமே அசத்தல் ரகம்தான்.

நிகழ்காலத்தில் சிவா said...

அருமை அட்டகாசம் பரிசல்..:)

தொடரலாம் அடுத்த பகுதி..

சுரேஷ் கண்ணன் said...

பரிசல்:

இந்தப் பதிவை என் மனைவியிடமும் காட்டினேன். மிகவும் ரசித்து வாசித்தார்.
அவர் சொல்ல விரும்பியது:

"நன்றாக உள்ளது. தொடருங்கள். எங்களுக்கு எழுத நேரம் கிடைச்சால் நீங்க தாங்க மாட்டீங்க. பொழச்சுப் போங்க"

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema

Madhavan Srinivasagopalan said...

சவால் - வருடா வருடம், பரிசல், ஆதிரா இணைந்து நடத்தும் தமிழ்ப் பதிவுலக சிறுகதைப் போட்டி.

ponsiva said...

கூகுள் ப்ளஸ் – இன்னமும் இன்னதென்று தெரியாத ஒரு வஸ்து
எனக்கும்தான் பாஸ்

ராஜ நடராஜன் said...

பெருசா இருந்தாத்தான் டிக்ஸனரி:)

அப்ப பரிசா இருந்தா!

Lusty Leo said...
This comment has been removed by the author.
Lusty Leo said...

அருமை , அட்டகாசம், ---------- டச்....

பரிசல் - கன்னாபின்னாவென யோசிப்போர் சங்கத் தலைவர்...

புதுகைத் தென்றல் said...

:))))))))))))) அசத்தலோ அசத்தல்
(அங்கங்க தங்க்ஸை சீண்டியிருப்பதை மட்டும் வன்மையா கண்டிக்கிறேன்)

வெண் புரவி said...

ஒவ்வொன்றும் பரிசல் டச்...எல்லாமே நச்.

சுசி said...

செம்ம்ம்ம!!

சிரிச்சு முடியலைங்க :)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
காலை வணக்கம்: அருகிலிருப்பவருக்கு சொல்லாமல் அண்டார்டிக்காவில் இருப்பவர்களுக்கு சொல்வது
//
Nach.....

Mahi_Granny said...

அருமை , அட்டகாசம், ---------- டச்

Rathnavel said...

அருமையான நகைச்சுவை தோரணங்கள்.
எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

பிரதீபா said...

ஒன்னுக்கொன்னு செம காலாய்ப்புங்க. அதுலயும்
//குட் நைட்
சூப்பர் ஹிட்
சீரியல்
க்ரிக்கெட் // மிக ரசித்தவை.

Logan said...

Vikatan வலையோசை - Valthukkal Parisal

vinu said...

ஆங் மறக்காம நம்ம வூட்டு விசேசத்துக்கு வந்துடுங்க..... வர்ட்டா....


அப்பாலிக்கா ஆனந்தவிகடன் பகுதிக்கு அண்ணனனுக்கு ஒரு வாழ்த்து பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!!!!

இரசிகை said...

gd mng
gd nt
canteen
conference hall

ithellaam pidichurunthathu..