பரிசல்காரன்

ரசிப்போர் விழி தேடி...

சினிமா.. சினிமா..!

எனது ரொம்ப பழைய நோட் ஒன்றில் எழுதி வைத்திருந்தது இது.. இப்பொது ஏதாவது மாற்றமிருக்கிறதா அல்லது ஏதாவது சேர்ந்திருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:-

  • சோகமான செய்தியை கேட்கும் கதாபாத்திரம், கண்டிப்பாக கையில் ஏதாவது வைத்திருந்து, செய்தி கேட்டதும் அதை கீழே போட்டு விடுவது..
  • டேபிள் ட்ராயரில் அவசரமாக எதையாவது தேடும்போது, ட்ராயர் முழுவதையும் கலை, கலை என்று கலைத்துவிடுவது..
  • கைதி, ஹீரோவாகவோ, முக்கிய நடிகராகவோ இருந்தால் கண்டிப்பாக FANCY NUMBER தான்!
  • வக்கீல் கக்கூஸூக்கு போனாலும் கருப்பு கோட்டோடுதான் போவார்!(அதேபோல அதிகபட்ச படங்களில் வக்கீல்கள் வில்லன்களோடுதான் இருக்கிறார்!)
  • எதிர்முனையில் ஃபோன் வைக்கப்பட்டாலும், திரையில் இருக்கும் கதாபாத்திரம் ரிசீவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் வைப்பார்.
  • எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு உடை ஜிப்பாதான்.
  • அதேபோல.. டீச்சருக்கு - கண்ணாடி + குடை / கலெக்டர் - கண்ணாடி மட்டும்.
  • டாக்டர் சோகமான செய்தி சொல்லும் போது, மறக்காமல் கண்ணாடியை கழட்டுவார்.
  • பெரும்பாலான கதாபாத்திரங்கள் வண்டியை நிறுத்தும் போது சடன் பிரேக் போட்டுத்தான் நிறுத்துவார்கள்.

1 அலசல்கள்...:

வால்பையன் 21 August 2009 8:52 PM  

மொக்கையா இருக்குறதால யாரும் பின்னூட்டம் போடலையோ!

ஆன்லைனில் எங்கள் புத்தகம் வாங்க...

எனது டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக்கவும்.


கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக்கவும்.

நன்றி. வணக்கம்!!!

தொடர்புக்கு...

kbkk007@gmail.com

உடன்வரும் நண்பர்கள்...

செம ‘ஹிட்’ மச்சி...!

Provided by accredited online degrees website.

About Me

My Photo
Krishna Kumar K.B.
‘என்னத்த எழுத’ என்றெண்ணாமல் எண்ணத்தை எழுதுபவன்.... (கவிதைகளில் நான் ‘அனந்த்பாலா’)
View my complete profile

Blog Archive

உங்கள் வரவே வரமாய்...